உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு அன்ன பூஜை!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு அன்ன பூஜை!

நாகர்கோவில்: கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்ற அன்ன பூஜை விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை 4ம் தேதி, மகா சமாதி அடைந்தார். இந்த நாளை, கிராம முன்னேற்ற திட்ட தொண்டர்கள் தினமாக, விவேகானந்தா கேந்திரா கடைபிடிக்கிறது. இதற்காக, பொது மக்களிடம் இருந்து, அரிசி தானமாக பெறப்படுகிறது. நேற்று, இந்த அரிசி, கேந்திரா அவைக்கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு, அதன் மேல் அன்னபூரணி தேவியை வைத்து பூஜை செய்யப்பட்டது. இறுதியில் அந்த அரிசி, பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !