மகரம்: பணவரவு கூடும்!
மதிப்பு, கவுரவத்தோடு வாழ விரும்பும் மகர ராசி அன்பர்களே!
சுக்கிரன் , செவ்வாய் சாதகமான பலனைத் தருவார்கள். புதன் ஜூலை30 வரை நன்மை தருவார். அதன்பின் அவர் கடகத்திற்கு மாறி நற்பலனை கொடுக்க மாட்டார். மற்ற கிரகங்களும் நற்பலனை கொடுக்கும் நிலையில் இல்லை. பணவரவு அதிகரிக்கும். ஜூலை30க்கு பிறகு புதனால் சிற்சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வரலாம்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். ஆகஸ்ட்6,7 ல் பெண்களால் அதிக நன்மை கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். ஆகஸட்10,11,12ல் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.பணியாளர்களுக்கு புதன் 6ம் இடத்தில் இருப்பதால் பதவி உயர்வு காண்பர். ஜூலை30 க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டி வரும். மனக்கவலை ஏற்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். தொழில், வியாபாரத்தில் சீரான பலனை எதிர்பார்க்கலாம். பகைவர்களின் இடையூறு மறையும். அலைச்சல் அதிகரிக்கும். ஜூலை 23,24ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜூலை 21,22, 25,26ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். கேதுவால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஜூலை30 வரை புதன் சாதகமாக உள்ளதால் நற்பெயர் எடுப்பர். ஆசிரியரின் ஆலோசனை நன்மை தரும்.விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் காணலாம். கால்நடை மூலம் ஜூலை31 வரை நற்பலன் பெறலாம். பெண்களுக்கு உங்களால் குடும்பம் சிறக்கும். ஆகஸ்ட்3,4,5ல் புத்தாடை, அணிகலன் கிடைக்க பெறலாம்.
நல்ல நாட்கள்: ஜூலை 17,18,19,20, 23,24, 27,28, ஆகஸ்ட்3,4,5,6,7, 13,14,15,16.
கவனநாட்கள்: ஆகஸ்ட் 8,9 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3. நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: ஏழைகளுக்கும், சன்னியாசிகளுக்கும் உதவுங்கள். வியாழனன்று சிவவடிவான தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள்.