21ம் தேதி நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை
ஸ்ரீநகர்: அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, வரும், 21ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, "சாரி முபராக் என, அழைக்கப்படும், சிவனின் தண்டாயுதம், ஆக 16 ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக் கோவிலில், ஆண்டு தோறும் உருவாகும், பனி லிங்கத்தை தரிசிக்க, பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். இந்த ஆண்டுக்கான, பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன், 28ல் துவங்கியது. 55 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை, வரும், 21ம் தேதி முடிவடைகிறது. பனி லிங்க தரிசன யாத்திரையின் இறுதி கட்டத்தில், சிவனால் வழங்கப்பட்டதாக கருதப்படும், வெள்ளி தண்டாயுதத்தை எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீநகரிலிருந்து, சாதுக்களால் எடுத்துச் செல்லப்படும், சாரி முபாரக் என, அழைக்கப்படும், இந்த தண்டாயுதம், ரக்ஷா பந்தன் நாளன்று, குகை கோவிலை சென்றடைந்ததும், அங்கு பூஜைகள் நடைபெறும். அத்துடன், பனிலிங்க தரிசன யாத்திரை நிறைவுக்கு வரும். இதன்படி, சாரி முபாரக் ஆக 16 ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டது.