உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஆடிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில், ஆடிப்பூர விழா, சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடி மாதம் ஐந்து வெள்ளிக்கிழமை வந்தது. சிறப்பு வாய்ந்த கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு காப்பு அணிவிக்கப்பட்டது. சேலம், அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மனுக்கு, 10,008 வளையல்கள், 2,500 தாலிக் கயிறு அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. லவ்வோ காலனி சங்கரமடத்தில், சாரதாம்பிகைக்கு, 10,000 வளையல்கள் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோட்டை மாரியம்மனுக்கு, மஞ்சள் காப்பு அலங்காரமும், அம்மாப்பேட்டை, செங்குந்தர் மாரியம்மனுக்கு, தங்க கவச அலங்காரமும் அணிவிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி, பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், வளையல் காப்பு, மஞ்சள் காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !