சிதம்பரநகர் ஹயக்ரீவருக்கு நாளை கவசம் அணிவிப்பு
ADDED :4467 days ago
திருநெல்வேலி: சிதம்பரநகரில் ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு திருமுடி முதல் திருஅடி வரை நாளை (20ம் தேதி) கவசம் அணிவிக்கப்படுகிறது. ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நாளை (20ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சங்கர்நகர் சிதம்பரநகர் லெட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் உலக நன்மைக்காகவும், கல்விக்காகவும் லெட்சுமி ஹயக்ரீவருக்கு சகஸ்ர நாம பாராயணமும், திருமுடி முதல் திருஅடி வரை அங்கி (கவசம்) அணிவிக்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல், அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை மாதவன் பட்டாச்சாரியார், வரதராஜ ரகு பட்டாச்சாரியார், வெங்கடேஷ் பட்டாச்சாரியார் செய்துள்ளனர்.