உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர­லாற்றில் இடம் பெற்ற பல்லாவரம் கைக்­கோ­டரி!

வர­லாற்றில் இடம் பெற்ற பல்லாவரம் கைக்­கோ­டரி!

சென்னை: சென்­னையில், ராபர்ட் புரூஸ் புட் அக­ழாய்வில், கண்­டெ­டுத்த கைக்­கோ­ட­ரியே, தமிழ­கத்தின் தொன்­மை­யான வர­லாற்றை நிரூபிக்க, உத­வி­யது,’’ என, ‘இன்டாக்’கின், தமி­ழக குழு தலைவர், சுரேஷ் கூறினார். சென்னை பல்­கலை, பழங்­கால வர­லாறு மற்றும் தொல்­லியல் துறை சார்பில், சென்னை தினம் கொண்­டா­டப்­பட்­டது. அதில், ‘இன்டாக்’ அமைப்பின், தமி­ழக குழு தலைவர், சுரேஷ் சிறப்பு விருந்­தி­ன­ராக, கலந்து கொண்டார். துறை தலைவர், பாலாஜி தலைமை வகித்தார்.

முதல் கைக்­கோ­டரி: அதில், சுரேஷ் பேசி­ய­தா­வது: தமி­ழக தொல்­லியல் ஆய்­வு­களில், சென்­னையில் கண்­டெ­டுக்­கப்­பட்ட பொருட்கள், வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை. 1863, மே, 31ம் தேதி அன்று, சென்னையை அடுத்த பல்­லா­வரத்தில், ராபர்ட் புரூஸ் புட் அக­ழாய்வு செய்தார். அடிப்­ப­டையில் மண்­ணியல் ஆய்­வா­ள­ரான அவர், தனது துறை தொடர்­பா­கவே, அக­ழாய்வு செய்தார். அங்கு, வேட்­டை­யா­டு­வ­தற்கும், பிற காரி­யங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும், கைக்­கோ­டரி கண்டெ­டுக்­கப்­பட்­டது. இதுவே, தெற்­கா­சிய ஆய்­வு­களில், முதன் முதலில் கண்­டெ­டுக்­கப்­பட்ட, கைக்­கோ­டரி. ராபர்ட் புரூஸ் புட்­டுக்கு, அவருடைய நண்பர் வில்­லியம் கிங், துணை­யாக இருந்தார். பின்னாளில், வில்­லியம் கிங்கும் தனி­யாக தொல்­லியல் ஆய்­வு­களில், ஈடு­பட்டார். அந்த ஊக்­கமே, 1880ல், ஆதிச்­ச­ நல்லூரில் நடந்த அக­ழாய்வில், வில்­லியம் கிங் ஈடு­பட ஊக்கம் கொடுத்­தது. சென்­னையில் உள்ள, பல்­வேறு இடங்கள், வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை. குறிப்­பாக, மயிலாப்பூர், சாந்தோம், சேத்­துப்­பட்டு போன்­றவை, அதிக முக்கியத்­துவம் வாய்ந்த பகு­திகள்.

நாணய தொழிற்­சா­லைகள்: கடந்த, 1929ல், கீழ்ப்­பாக்­கத்தில், பிரெஞ்­சுக்­கா­ரரின் வீட்டில், பெருங்­கற்­கால காலத்திய, பொருட்கள் இருந்­தன. தொல்­லியல் துறை சார்பில், அலெக்­சாண்டர் ரியாவும், அவ­ருடன் ராகவன், ஆரா­வ­முதன் ஆகி­யோரும், அக­ழாய்வில் ஈடுபட்டனர். அதில், 2,000 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய பல்­வேறு பொருட்கள் கிடைத்­தன. அங்கு கண்­டெ­டுக்­கப்­பட்ட முது­மக்கள் தாழி, சென்னை அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. சென்­னையில், புனித ஜார்ஜ் கோட்டை, ஜார்ஜ் டவுன், திருவான்­மியூர், மயி­லாப்பூர், சிந்­தா­தி­ரிப்­பேட்டை, பூந்­த­மல்லி போன்ற இடங்­களில், நாணய தொழிற்­சாலைகள் இருந்­தன. பல இடங்­களில், நட­மாடும் நாணய தொழிற்­சா­லை­களும் இருந்துள்­ளன. இருப்­பினும், வட­சென்­னையில் உள்ள, நாணய தொழிற்­சாலை மட்­டுமே, பெரும்­புகழ் பெற்­றது.

திரு­வான்­மி­யூரில்...: கடந்த, 1883ல், சைதாப்­பேட்டையில், ரோமா­னிய நாணயங்கள் கிடைத்­தன. கிடைத்த இடம் தெரி­ய­வில்லை; எனினும், அங்­குள்ள, கார­ணீஸ்­வ­ரரர் கோவில் பகு­தியில், அந்த நாண­யங்கள் கிடைத்­தன என்ற, யூக­மான முடிவுக்கு வரலாம். கடந்த, 1979ல், சுதந்­திர தினம் கொண்டா­டு­வ­தற்­காக, திருவான்மியூர் அரசு பள்ளியில், பள்ளம் தோண்­டப்­பட்ட போது, பல்­வேறு வகை­யான, ரோமானிய நாணயங்கள் கிடைத்­தன. அதேபோல், புனித ஜார்ஜ் கோட்­டை­யிலும், ஜார்ஜ் டவு­னிலும், நாண­யங்கள் கண்­டெ­டுக்­கப் ­பட்டன. இவ்­வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !