இனி தடையேதும் இல்லை!
மக்ஃபிரத் என்றால் என்ன தெரியுமா? தடை தடையின்றி நமது செயல் பாடுகள் சிறப்பாக நடக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்தக் கருத்து நமக்கு தெளிவாகத் தெரிவிக்கிறது. அல்லாஹ் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான். அதற்காக, ஒருவர் மிகவும் அழகாக ஒளுச் செய்து, உரிய நேரத்தில், ருகூவைப் பூரணமாகச் செய்து, முழுமையான உள்ளச்சத்துடன் தொழுது முடித்தால் அவரை மன்னித்து விடுவது அல்லாஹ்வின் மீது கடமை யாகும். அவ்வாறு ஒருவர் செய்யவில்லை என்றால், அவ்வாறு மன்னிப்பது அல்லாஹ்வின் மீது கடமையல்ல. அவன் விரும்பினால் அவரை மன்னிப்பான்; அவன் விரும்பினால் அவரை வேதனை செய்வான், என்பது அண்ணலாரின் அருள்மொழி. ஆம்.. தடைகளைத் தாண்ட அல்லாஹ்வை அனுதினமும் தொழ வேண்டும். ஏனெனில், மற்ற எல்லாக் கடமைகளும் பூமியில் செய்யக்கூடியவையாக உள்ளன. தொழுகை வானுலகத்தில் கடமையாக்கப் பட்டதாகும். இறைவன் சொன்ன தொழுகையை நிறைவேற்றாதவர், மறுஉலகில் நிச்சயமாக விசாரணைக்கு உள்ளாக்கப் படுவார். அவர் ஸகர் என்னும் நரகத்திற்கு அனுப்பப்படுவார். இதுபோல் தொழாதவர் எல்லாரும் அங்கே வருவார்கள். அவர்களை நோக்கி, சொர்க்கத்தில் இருப்பவர்களான சுவனவாசிகள், நீங்கள் ஏன் நரகத்திற்கு வந்தீர்கள்? என கேட்பார்கள். அதற்கு அவர்கள், தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை என பதில் அளிப்பார்கள் (குர்ஆன் 74:43). இப்போது புரிந்து கொள்ளுங்கள்! தொழுகை என்பது எவ்வளவு முக்கிய மானது என்பதை! எவ்வளவுக் கெவ்வளவு தொழுகையைஅதிகப்படுத்துகிறமோ, அந்தஅளவுக்கு இறையச்சம் கொண்டு அவனை மகிழ்ச்சிப்படுத்தியவன் ஆவோம்.