நெகமம் விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
ADDED :4408 days ago
நெகமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 27 விநாயகர் சிலைகள் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். நெகமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் 27 விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இச்சிலைகளை அந்த அந்த கிராமங்களில் டெம்போ வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக வந்து, மூன்று நாட்கள் பூஜை செய்தனர். பின், நேற்று பிற்பகல் 2.00 மணியளவில், இச்சிலைகள் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டாம்பட்டிக்கு சென்றனர். அங்கிருந்து ஊர்வலமாக அம்பராம்பாளையம் ஆற்றுக்கு சென்று விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.