பஸ்சில் பயணம் செய்யும் போது மந்திரம் ஜெபிக்கலாமா?
ADDED :4794 days ago
வாகனங்களில் பல மணிநேரம் பயணம் செய்யும்போது நேரத்தைப் பயனுள்ளதாக செய்வது நல்லதே. விஷ்ணு சகஸ்ரநாமம், சிவ சகஸ்ரநாமம், கந்தசஷ்டிகவசம் போன்றவற்றைச் சொல்வதும், பக்திப்பாடல்களை மனதுக்குள்ளாகவே பாடியபடியும் வருவதால் பலன் உண்டு. ஆனால், காயத்ரி மந்திரம் மட்டும் ஜெபிக்கக்கூடாது. இதை பூஜையறையில் ஜபிப்பதே நல்லது.