பெற்றோர் சேவையே பெரிது!
ADDED :4792 days ago
மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் (பந்தர்பூர்) பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இவரை மராத்தியில் விட்டோபா என்பர். விட் என்றால் செங்கல். உபா என்றால் நிற்பது. புண்டரீகர் என்ற பக்தர், பெற்றோருக்கு சேவை செய்து கொண்டிருந்தார். அவரைக் காண பெருமாள் வந்தபோது, பெற்றோர் சேவையே உயர்ந்தது என்று கருதிய புண்டரீகர் ஒரு செங்கல்லை காட்டி, பெற்றோருக்கு சேவை செய்து முடிக்கும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். பெருமாளும் அவர் வரும்வரை காத்திருந்தார். புண்டரீகரின் பெயரால், புண்டரீகபுரம் எனப்பட்ட இத்தலம், காலப்போக்கில் பண்டரி புரமானது. கடவுள் சேவையை விட பெற்றோர் சேவையே உயர்ந்தது என்பதை உணர்த்தும் தலம் இது. மும்பையில் இருந்து 357 கி.மீ., தூரத்தில் உள்ளது.