விரும்பி கேட்ட பாடல்!
அவ்வையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும் சீக்கிரம் பூஜையை முடித்து விட்டு, சிவதரிசனம் செய்ய தங்களுடன் கயிலாயம் வரும்படி கூறினர். கைலாயம் வேறு, கணபதிபூஜை வேறல்ல என்ற அவ்வையார், விநாயகர் அகவலைப் பாடி பூஜையைத் தொடர்ந்தார். அவ்வையார் புறப்பட தாமதமானதால், அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். வழிபாட்டை முடித்த அவ்வையாரை விநாயகர் தன் துதிக்கையால் தூக்கி கயிலாயத்தில் சேர்த்து விட்டார். அவர் அங்கு சென்ற பிறகு தான், சுந்தரரும், சேரமானும் வந்து சேர்ந்தனர். விநாயகர் பாடல்களில் சீதக்களப செந்தாமரைப்பூம் எனத் துவங்கும் விநாயகர் அகவல் சிறப்பானது. இது அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதை தினமும் படிப்பவர்களின் வாழ்வை விநாயகரே உயர்த்துவார் என்பது நிச்சயம். விநாயகருக்கு பிடித்த இந்தப் பாடல், இனி உங்களின் நேயர் விருப்பப் பாடலாகவும் அமையும் தானே!