திருப்பதியில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை!
ADDED :4499 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், திருப்பதி பிரம்மோற்சவத்தில், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடைபெற உள்ளது. இச்சேவை வரும், 5ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை தினமும் நடைபெறும். அனைத்து நாளிலும், பாகவதர்கள் பிரபந்த பாடல்கள் பாடுவர். பக்தர்களுக்கு மூன்று வேளையும், அன்னதானம் வழங்கப்படும். அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், அறநிலையத் துறை செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.