கருணை உள்ளவரா?
ADDED :4773 days ago
ரமண மகரிஷியிடம் ஒருவர் மகரிஷியே! கடவுள் உண்மையிலேயே கருணை உள்ளவர்தானா? என்றார் ஆம்! என்றார் மகரிஷி. அப்படியானால் அவர் கருணை மழை எல்லோரிடமும் பொழிகிறதா? மீண்டும் ஆம் என்றார் மகரிஷி. அப்படியானால் எனக்கு மட்டும் அவர் கருணை மழை பொழிவது ஏன் தெரியவில்லை? அப்பனே! நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாய்! அதனால் அவரது கருணையை உன்னால் உணர முடியவில்லை. பாத்திரத்தை நிமிர்த்திவை என்று பதிலளித்தார் ரமணர். தெய்வங்களின் கருணையை ஏற்க, தூய மனம் என்னும் பாத்திரத்தை நாம் திறந்து வைத்திருக்கவேண்டும் என்பதைத்தான் ரமண மகரிஷி இவ்வாறு குறிப்பிட்டார்.