உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயுத பூஜை வழிபாடு வேதையில் கோலாகலம்

ஆயுத பூஜை வழிபாடு வேதையில் கோலாகலம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் ஆயுதபூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், குடங்களில் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலிலுள்ள வீணையில்லா சரஸ்வதிக்கு நேற்றுக்காலை, 11 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வழிபட்டனர். வேதாரண்யம் நகரில் மேலவீதி, வடக்கு வீதி, நாகை ரஸ்தா, சூப்பர் பஜார் வீதிகளில், ஆயுதபூஜையையொட்டி ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் சிறப்பு பூஜை நடந்தது. மேலவீதியில் திடீர் கடைகளில், பூஜைக்கு தேவையான மாவிலை, பனங்குருத்து தோரணங்கள் மற்றும் பின்னப்பூ, கொன்னப்பூ விற்பனை ஜரூராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !