உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி மடத்தில் குருபூஜை

தட்சிணாமூர்த்தி மடத்தில் குருபூஜை

ஊட்டி: ஊட்டி தட்சிணாமூர்த்தி மடத்தில் ஏகாம்பர தேசிக அடிகளாரின் 94வது குருபூஜை நடந்தது. சமாதிகளுக்கு 32 வகையான அபிஷே­ கங்­கள், விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர், அம்பலவாணர் தட்சிணாமூர்த்தி, திருமுருகன், குருமுதல்வர் சமாதி கோவில்களுக்கு பேரொளி வழிபாடு செய்யப்பட்டது. மதியம் 1.00 மணிக்கு அமுது செய்வித்தல் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு இரண்டாவது மடாதிபதியான ரத்தினமணி அம்மையாரின் 94வது குருபூஜை விழா நடந்தது.* கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை நடக்கிறது. காலை 10.00 மணிக்கு வேள்வி வழிபாடு, பவுர்ணமி பூஜை, நடக்கிறது. 21ம் தேதி கிருத்திகை பூஜையில் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு 32 வகையிலான அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து காசி விசாலாட்சி அம்பாள், காசி விஸ்வநாதருக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !