ராமேசுவரம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை: பக்தர்கள் அவதி!
ADDED :4429 days ago
ராமேசுவரம்: ராமேசுவரம் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி கோவிலுக்கு உள்ளே வரும் பக்தர்கள் செல்போன், கேமிரா, சூட்கேஸ், டிராவல் பேக்குகள், துணிப்பைகள் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு வரக் கூடாது என்ற கட்டுப் பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.