உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரருக்கு ஐப்பசி பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்!

அர்த்தநாரீஸ்வரருக்கு ஐப்பசி பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செட்டிக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மஞ்சள் பொடி, திரவிய பொடி, மூலிகை பொடிகள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், அண்ணாபிஷேகம், பழ சாறு அபிஷேங்கள், கனகாபிஷேகம் கலசாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேங்கள் நடந்தது. தொடர்ந்து பிரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மாரியம்மன், துர்க்கை, காத்தாயி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டது. மூலவர் உள்ளிட்ட பிரிவார தெய்வங்களுக்கு சிவச்சாரியார் ஆனந்தன் குருக்கள் செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவசக்தி அடிமை சுவாமிகள், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !