கோயிலில் திருக்குளம் இருப்பதன் நோக்கம் என்ன?
ADDED :4480 days ago
பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தவே, கோயில்களில் குளங்கள் வெட்டப் பட்டன. கும்பகோணம் மகாமககுளம், திருவாரூர் கமலாலயம் என தீர்த்தத்தால் பெயர் பெற்ற தலங்கள் பல உண்டு. கோயில் குளத்தில் நீராடினால், பாவம் நீங்கி புண்ணியம் சேர்கிறது. குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டியது நம் கடமை.