மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4334 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4334 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில், சிவன் மற்றும் நரசிம்மர் கோவிலில் வரும் 1ம் தேதி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் நவ.,1ம் தேதி பிரதோஷ நாளாக அமைந்துள்ளது. அன்று பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. முந்தைய நாளான 31ம் தேதி விஷ்வக்சேனர் ஆராதன நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், வாசுதேவ புண்யாகாஜனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மூல மந்திரங்கள் ஜபம், சாற்றுமறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து பிரதோஷத்தன்று மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. அலங்கார நைவேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. சிவனுக்கு சிறப்பு ஆடைகளில் அலங்காரங்கள் செய்யப்படுகிறது.பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம் என கோவில்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
4334 days ago
4334 days ago