உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரசம்ஹார பெருவிழா நவ., 3ல் துவக்கம்

சூரசம்ஹார பெருவிழா நவ., 3ல் துவக்கம்

உடுமலை: உடுமலை பாப்பன்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில், சூரசம்ஹார பெருவிழா வரும் 3 ம் தேதி துவங்குகிறது. உடுமலை பாப்பன்குளத்தில், பழமை வாய்ந்த ஞான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு சூரŒம்ஹார பெருவிழா வரும் நவ., 3 ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10.00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கி, தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மாலை 6:00 மணிக்கு மயூர வாகனத்தில், சாமி திருவீதியுலா நடக்கிறது. 4 ம் தேதி காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் துவங்கி, இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில், சாமி திருவீதியுலா நடக்கிறது. 8 ம் தேதி காலை 9:00 மணிக்கு கந்த புராணம் சொற்பொழிவும், 11.00 மணிக்கு ஞானவேல் முருகன் அலங்காரம், ஸ்ரீசுப்பிரமணிய திரிஸதி ஆகிய பூஜைகள் நடக்கின்றன. மாலை 4:00 மணிக்கு நடைதிருக்காப்பிடுதல், வீரவேல்முருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், நவவீரர்கள் புடைசூழ ஸ்ரீவீரபாகுதேவர் போர்க்கோலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 5:00 மணி முதல் சூரபத்ரன் வதம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !