உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: 8ம் தேதி கொடியேற்றம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: 8ம் தேதி கொடியேற்றம்!

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா வரும், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, வரும், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 14ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் தேரோட்டம் நடக்கும். 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது, மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளிலிருந்தும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி செய்வது குறித்து, வேலூர் சரக டி.ஐ.ஜி., முருகன் (பொறுப்பு), மலை உச்சிக்கு சென்று, நேற்று ஆய்வு செய்தார்.பக்தர்களுக்கு உதவ, கமாண்டோ படை வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், போலீசார் தீயணைப்பு வீரர், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரை எங்கெங்கு நியமிப்பது என்றும், மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், பக்தர்களை ஒழுங்குபடுத்தி கீழே இறங்க வைப்பதற்கு, ஜெனரேட்டர் மூலம், மின் வசதி செய்வது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது.

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !