பழநி கோயில் உண்டியல்: 18 நாளில் ரூ.89லட்சம் வசூல்!
ADDED :4526 days ago
பழநி: பழநி கோயில் உண்டியல் 18 நாட்களில், 89 லட்சத்தி 26 ஆயிரத்தி 145 ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதில், ரொக்கமாக 89 லட்சத்தி 26 ஆயிரத்து 145 ரூபாயும், தங்கம் 402 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 994 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 83 கிடைத்துள்ளது. இவை 18 நாட்களில் வசூலாகியுள்ளது. தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, உடனிருந்தார்.