உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் வழிபாடு

சென்னை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் வழிபாடு

சென்னை: வடபழனி முருகன் கோவில், பூங்காநகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் என பல்வேறு கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. கடந்த 3–ந் தேதி சஷ்டி விழா தொடங்கியது. நிறைவுநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு, வடபழனி முருகன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.  மாலையில், சூரசம்ஹார நிகழ்ச்சிகாக, மாலை 7 மணிக்கு, கோவிலில் இருந்து உற்சவர் முருகர் மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க, 4 மாட வீதிகளில் வலம் வந்து, 8.20 மணி அளவில் ராஜகோபுரம் எதிரே சூரசம்ஹாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வந்தார். அங்கு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !