உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல!

பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல!

நாகப்பட்டினம்: கோமாரி நோயால் பசுக்கள் இறப்பது அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார். நாகப்பட்டினம் சீர்காழியில் நடைபெற்ற குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட அவர் கோமாரி நோயினால் இந்த பகுதியில் பதினைந்தாயிரம் மாடுகளுக்கு மேல் இறந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆராய்ச்சி நிறுவனம், கால்நடைபல்கலைக்கழகம், கால்நடைப் பராமரிப்புத்துறை என்று இத்தனை இருந்தும் அவற்றால் கால்நடைகளின் இறப்பைத் தடுக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படி பசுக்கள் இறப்பது ஆட்சிக்கு, அரசுக்கு நல்லதல்ல என்றார் ராமகோபாலன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !