உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா!

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா!

திருச்சானூர்: பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 29-ம் தேதி முதல் 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் திருச்சானூரில் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த பிரம்மோற்சவ விழாவுக்காக, திருப்பதி திருச்சானூர் முழுவதும் அலங்கார வளைவுகள், மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பத்மாவதி தாயார் கோயிலில் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !