உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலில், ஒரு லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் பணம், 269 கிராம் தங்கத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. திரு ப்பூர் உதவி ஆணையாளர் ஆன ந்த், செயல் அலுவலர் மாலா ஆகியோர் தலைமையில், உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். உண்டியலில், ஒன்பது லட்சத்து, 91 ஆயிரத்து, 521 ரூபாய் பணம், 269 கிராம் தங்கம், 78 கிராம் வெள்ளி, 117 அமெரிக்க டாலரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !