வைகுண்டரின் கார்த்திகை தர்ம விழா
ADDED :4341 days ago
சுரண்டை: சுரண்டையில் வரும் டிசம்பர் 1ம் தேதி அய்யா வைகுண்டரின் கார்த்திகை தர்ம பெருந்திருவிழா நடக்கிறது. சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் அய்யா நிச்சயித்தபடி நடக்கும் விழாவில் காலை 8 மணிக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, 11 மணிக்கு உலக புனிதஜோதி, பணிவிடை, 12 மணிக்கு உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை, மதியம் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும். வெற்றிலை, பாக்கு, துளசி, தேங்காய், எண்ணெய், பிச்சிப்பூ சரம், வாழைப்பழம், எலுமிச்சம்கனி, தேங்காய், சந்தனம், பன்னீர், பழவகைகள், பச்சரிசி, மிளகு, சிறுபயறு, வத்தல் போன்ற பணிவிடைக்கு தேவையான பொருட்களையும் அன்னதர்மத்திற்குரிய பொருட்களையும் பொதுமக்கள் வழங்கி அய்யாவின் அருள்பெறுமாறு சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்பு கொடி மக்கள் சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.