மழை வளம் வேண்டி யாகம்!
ADDED :4341 days ago
தூத்துக்குடி: அய்யனடைப்பில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மழை வளம் வேண்டி செவ்வாய்க்கிழமை பைரவர் யாகம் நடைபெற்றது. தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமான 11 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பைரவ அஷ்டமியை முன்னிட்டு, தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் நல்லமழை பொழிந்து வளம் பெறவேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோயின்றி நலமாக வாழவேண்டியும் பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பைரவர் யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.