உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய ஜென்மராக்கினி ஆலய பங்கு பெருவிழா துவக்கம்!

தூய ஜென்மராக்கினி ஆலய பங்கு பெருவிழா துவக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை ஆலய 322வது ஆண்டு பங்கு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, காலை 5:15 மணிக்கு நவநாள் தொடக்கமும், அதனை தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. மாலை 5:15 மணியளவில் ஜெபமாலை கொடி பவனி நடந்தது. துச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட லூயிஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தினமும், காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வரும் 8ம் தேதி மாலை 6.00 மணியளவில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. கழ்ச்சியில் புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. 9ம் தேதி கொடியிறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, முதன்மை குரு அருளானந்தம் மற்றும் உதவி பங்கு தந்தைகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !