பூமியை நாம் வழிபாடு செய்வதாகத் தெரியவில்லையே?
ADDED :4375 days ago
பூமித்தாயையே திருமாலின் துணைவியாக வழிபாடு பூதேவியாக வழிபடுகிறோம். ஆண்டாள் யார்? பூமித்தாயின் அவதாரம் தானே! இரண்யாட்சன் என்னும் அசுரனிடம் இருந்து, பூமிதேவியைக் காப்பாற்ற திருமால் எடுத்ததே வராக அவதாரம். இவர் பூமி தேவியைத் தன் மடியில் தாங்கியகோலத்தில் காட்சியளிப்பார். எந்த கிருஷ்ணர் கோயிலுக்கு போனாலும் ருக்மணி, சத்யபாமா உடன் இருப்பர். இவர்களில் சத்யபாமா, பூமித்தாயின் அம்சமே!