உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: பிள்ளைகளால் பெருமை!

ரிஷபம்: பிள்ளைகளால் பெருமை!

உற்சாகம் மிக்க ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாயகன் சுக்கிரன் 9-ம் இடத்தில் இருக்க இந்த மாதம் மலர்கிறது. அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். சூரியன் விருச்சிகத்தில் இருக்கும்போது உங்களுக்கு சாதகமான பலனை தரமாட்டார். குரு,சனி,ராகு முழு பலனை கொடுப்பார்கள். செவ்வாயால் எதிரிகளின் இடையூறு அவ்வப் போது தலைதூக்கலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். புதன் 8-ம் இடத்தில் உள்ளதால் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன.2க்கு பிறகு 9-ம் இடத்திற்கு வருவதால் உங்கள் செல்வாக்கு பாதிக்கலாம். பணம் விரயமாகும். பெண்கள் உதவிகரமாக இருபர். ஜன.7,8 ல் உறவினரால் நன்மை  கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசு வகையில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க வேண்டாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். பணியாளர்களுக்கு சுக்கிரன், குருவால் சீரான நிலை இருக்கும். நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். ஜன.2க்கு பிறகு கடுமையாக உழைக்க நேரிடும். ஜன.5,6 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கலைஞர்களுக்கு வசதி பெருகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான பலன் பெறுவர்.மாணவர்கள் மிகவும் சிறப்பான நிலையை அடைவர். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். ஜன.2க்கு பிறகு கவனம் தேவை.விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். வழக்கு விவகாரம் சீராக இருக்கும்.  பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும்.  பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம். சிலருக்கு வயிறு தொடர்பான உபாதை நேரும்.

அதிர்ஷ்டஎண்: 4,7     நிறம்: நீலம்,வெள்ளை.
நல்லநாள்: டிச.16,17,20,21,27,28,29,30,31, ஜன.5,6, 7, 8, 11, 12,13
கவனநாள்: ஜன.1,2 சந்திராஷ்டமம்

வழிபாடு: துர்க்கை வழிபாடு தைரியத்தை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !