சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 14ல் சனிப்பிரதோஷ பூஜை!
ADDED :4430 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 14ம் தேதி பிரதோஷபூஜை நடக்கிறது.பிரதோஷ பூஜை மாதம் இரண்டு முறை வருகிறது. கடந்த மாதம் 30 ம்தேதி சனிப்பிரதோஷ பூஜை நடந்தது. வரும் 14ம் தேதி (சனிக்கிழமையன்று) வரும் பிரதோஷ வழிபாட்டிற்கு சிறப்புகள் அதிகம் என்பதால், பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதருக்கு வரும் 14ம் தேதி சனிப்பிரதோஷ பூஜை நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு துவங்கும் பூஜையில் பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடக்கிறது.பின்னர் சிவபெருமான், நந்தி, துர்க்கை அம்மனக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.