ஆந்திர மகா சபா சார்பில்15ம் தேதி ஐயப்ப சுவாமி பூஜை
ADDED :4329 days ago
புதுச்சேரி: புதுச்சேரி ஆந்திர மகா சபா சார்பில், வரும் 15ம் தேதி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, வரும் 15ம் சிறப்பு பூஜை புதுச்சேரி ஆந்திர மகா சபா சார்பில் நடக்கிறது. அதையொட்டி, அன்று காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8:30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1:30 மணிக்கு மூல மந்திர ஜபம், மாலை 3:00 மணிக்கு சைஸ்தரநாமம், 5:00 மணிக்கு தன்வந்திரி சஞ்சீவி விநாயகர் கோவிலில், ஐய்யப்ப பக்தர்கள் குழு பஜனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சமிதியை சேர்ந்த நடராஜ் குருக்கள் செய்து வருகிறார்.