பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை
ADDED :4356 days ago
திருநெல்வேலி: பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது.பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபா சார்பில் தனுர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தது. விஸ்வரூப தரிசனம், திருவாதாரணம், திருப்பாவை சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. ஸ்ரீ கோபாபலன் கைங்கர்ய சபா தலைவர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் ராமச்சந்திரன், தொழிலதிபர் வேணி பாலசுப்பிரமணியன், சுப்புராயலு ரெட்டியார், அனந்தநாராயணன், ரெங்கநாதன் ஐயங்கார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.