உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பேய்க்குளம்:பேய்க்குளம்அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேதஸ்ரீ அழகியகூத்தர்கோயிலில் திருவாதிரைதிருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் நாளை (18ம் ய்ததி) நடக்கிறது. பே÷க்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது. இக்கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த ஒரே பஞ்ச விக்கிரக ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் திருவாதிரை திருவிழா நடந்து வருகிறது. இக்கோயிலில் திருவாதிரை கொடியேற்று விழா 9ஆம் ய்ததி துவங்கி நாளை வரை 9 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான கொடியேற்று விழாவை முன்னிட்டு அம்பாள் மற்றும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு

சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி வீதி உலா வருதல் அதன்பின் கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து 9 நாட்கள் சுவாமிக்கு அபிஷேகம், வீதி உலா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ஆம் நாளான நாளைஆருத்ரா தரிசனம் விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு காலை 3மணிக்கு கணபதி ஹோமம், 4மணிக்கு சுவாமி அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளல், 4.30 மணிக்கு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம், 6மணிக்கு ஆருத்ரா தரிசனம், மஹா தாண்டவ தீபாராதனை , அதை தொடர்ந்து 12 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா, 1 மணிக்கு அன்னதானம், மாலை 5மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9மணிக்கு சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி மேயர் சசிகலாபுஷ்பா, திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்திய ஞான பண்டார சந்நதி சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அன்றைய தினம் முழுவதும் பேய்க்குளத்தில் இருந்து கட்டாரிமங்கலம் கோயில் வரை போக்குவரத்து வசதி செயேப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா (பொறுப்பு) நடராஜபிள்ளை தலைமையில் கோயில் நிர்வாகிகள், மற்றும் ஸ்ரீஅழகிய கூத்தர் அறக்கட்டளை நிர்வாகிகளும் செ÷து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !