சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா: இன்று தேரோட்டம்!
சுசிந்திரம்: தாணுமாலயன் சுவாமி கோயிலில் கடந்த 9ம்தேதி திருக்கொடியேற்றம், திருமுறை பேரவை ஊர்வலம், திருவெம்பாவை பாராயணம் நடந்தது. இரண்டாம் நாள் காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா, பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா, மாலை சமய சொற்பொழிவு, இரவு பக்தி இன்னிசை, புஷ்பக விமானத்தில் சுவாமி பவனி வருதல் நடந்தது.மூன்றாம் நாள் காலை புஷ்பவிமான வாகனத்தில் சுவாமி பவனி, மாலை சிறப்பு சமய சொற்பொழிவு, இரவு பக்தி இன்னிசை, கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி பவனி, மக்கள் மார் சந்திப்பு,நான்காம் நாள் காலை பூதவாகனத்தில் சுவாமி பவனி, திருவெம்பாவை இசை, மாலை சமய சொற்பொழிவு, ஐந்தாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்தி தரிசனம், கருட தரிசனம், மாலை பக்தி இன்னிசை, இரவு மெல்லிசை, ரிஷ்ப வாகனத்தில் சுவாமி பவனி, ஆறாம் நாள் காலை பூங்கோயில் வாகனத்தில் சுவாமி பவனி, மாலை குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு பக்தி இன்னிசை, இந்திர வாகனத்தில் சுவாமி பவனி,ஏழாம் நாள் காலை பல்லக்கு வாகனத்தில் சுவாமி பவனி, மாலை நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து சார்த்துதல், கைலாசபர்வத வாகனத்தில் சுவாமி பவனி, எட்டாம் நாள் காலை சிதம்பரேஸ்வரர் வீதியுலா, இரவு சிதம்பரேஸ்வரரின் வாகன பவனி நடந்தது,ஒன்பதாம் நாளான இன்று (17ம்தேதி) கங்காளநாதர் பிட்சாடனராக பவனி வருதல், திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அமைச்சர் பச்சைமால், மாவட்ட கலெகடர் நாகராஜன், எஸ்.பி., மணிவண்ணன், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். மாலை சமய சொற்பொழிவு, இரவு மெல்லிசை, ரிஷம வாகனத்தில் வீதியுலா,சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது. பத்தாம் நாளான காலை ஆருத்ரா தரிசனம், மாலை நடராஜமூர்த்தி வீதியுலா, சமய சொற்பொழிவு, இரவு திரு ஆறாட்டு, பக்தி இன்னிசை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோனாச்சலம், மேலாளர் ஆறுமுகநயினார், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.