உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனுக்கு மருத்துவம்!

இறைவனுக்கு மருத்துவம்!

தேனி நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வைகை ஆற்றிற்கு அருகே அமைந்துள்ள கோயில் வீரப்ப ஐயனார் சுவாமி கோயில். இங்குள்ள சாமி, இடதுபுறம் தழும்புடனே காணப்படுகிறார். காரணம், முன் ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இந்த சுவாமிக் கல்லாகக் கிடக்க, அதை பக்தர் ஒருவர் தெரியாமல் கோடாரியால் வெட்ட, அதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கி தன்னை அடையாளம் காட்டினார் என்பது வரலாறு. இன்றும் சித்திரை முதல் தேதி சுவாமி கல்லை வெட்டியவரின் பரம்பரையில் இருந்து ஒருவர் வந்து சுவாமியின் வெட்டப்பட்ட காயத்திற்கு மருந்திடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !