உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விநாயகர் கோவிலில் பால்குடம் எடுத்த முருக பக்தர்கள்

காசி விநாயகர் கோவிலில் பால்குடம் எடுத்த முருக பக்தர்கள்

அவிநாசி: அவிநாசி திருமுருக பக்தர்கள் பேரவை மற்றும் பாத யாத்திரை குழு சார்பில், 36ம் ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. காசி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பால் குட ஊர்வலம் துவங்கியது. நான்கு ரத வீதிகளில் சென்ற ஊர்வலம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு, பால தண்டாயுதபாணி சுவாமிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !