புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனம்!
ADDED :4342 days ago
திருப்பதி: புத்தாண்டை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்படுகிறது. 2 மணி முதல் 3 மணி வரை வி.ஐ.பி.க்கள் தரிசனமும், பின்னர் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காலை முதல் இரவு வரை பக்தர்கள் இடைவிடாமல் தரிசனம் செய்யலாம். ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் இன்றே திருமலையில் குவிய தொடங்கி விட்டனர். 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது. தர்ம தரிசன பக்தர்கள் மாலை 5 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.