கிருஷ்ணசுவாமி கோயில் விழா ஜன. 3-ல் தொடக்கம்
ADDED :4342 days ago
களியக்காவிளை: ஆம்பாடி கிருஷ்ணசுவாமி கோயில் மார்கழி திருவிழா ஜன. 3ல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், 6 மணிக்கு ஐங்காமம் ராம்முனி தேவன் ஆசிரமத்திலிருந்து தீபஜோதியுடன் பால்குடமும், சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு கொடியேற்றம், 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.