பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் விழா!
ADDED :4335 days ago
கோபி: கொளப்பலூர், ஸ்ரீ பச்சைநாயகி அம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூர் அம்மன் கோவில், ஸ்ரீ பச்சைநாயகி அம்மன் ஆலய குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.