மதனகோபால சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி!
ADDED :4335 days ago
பெரம்பலூர்: மதனகோபால சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 40 அடி உயர கம்பத்து ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டு, கோயிலின் எதிரே உள்ள 40 அடி உயர கம்பத்து ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.