கோயில்களுக்கு சாதாரண மின் கட்டண நிர்ணயம்
ADDED :4332 days ago
மதுரை: மதுரை மாவட்ட வி.எச்.பி., மற்றும் கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், இந்து ஒற்றுமை விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வி.எச்.பி., மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகோபால், பெரியமருது முன்னிலை வகித்தனர். கோயில்களுக்கு வியாபார ரீதியில் மின் கட்டணம் விதிக்காமல், சாதாரண கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். கச்சத்தீவை திரும்ப
பெறவேண்டும். 58 கிராமக் கல்வி திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். கிராமக் கோயில் பூஜாரிகளுக்கான நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் சின்மயா சோமசுந்தரம் ஏற்பாடு செய்தார்.