ப.வில்லியனூர் கோவிலில்11ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ADDED :4330 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவி லில் வரும் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, அன்று அதிகாலை 2 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பின், மூலவர் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம் செய்து, கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 4 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பத்திரி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.