சௌடேஸ்வரி கோவில் வீரக்குமாரர்கள் கத்திபோட்டு ஊர்வலம்
ஈரோடு: 18ம் ஆண்டு தை மாதப் பண்டிகையை முன்னிட்டு, சௌடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, வீரகுமாரர்கள் கத்திபோட்டு ஊர்வலமாக வந்து, தரிசனம் மேற்கொண்டனர்.ஈரோடு காரைவாய்க்கால் சீரங்க வீதி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில்,18ம் ஆண்டு தை மாதப்பண்டிகை, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை,7 மணிக்கு, காரைவாய்க்கால் சின்னமாரியம்மன் கோவில் திடலில் இருந்து, சத்தி பூஜை செய்து, சத்தி அழைத்து வருதலும், மதியம் சௌடேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜை, மஹா தீபாராதனை நடந்தது.பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வீரகுமாரர்கள், கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. காரைவாய்க்காலில் துவங்கி, பி.எஸ்.பார்க், சிக்னல், பெரியமாரியம்மன் கோவில் வரையிலும், ஊர்வலமாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள், பின் சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டனர்.மாலையில், ராகு தீப ஜோதி மெரவனையும், இன்று காலை, 11 மணிக்கு மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.