புராணத்தில் சூரியன்!
ADDED :4322 days ago
சூரியபுராணத்தில் நாரதர் சூரியனின் பெருமையையும், அவருக்குரிய சப்தமி விரதத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறியுள்ளார். ‹ரியனே உலகத்தின் முழுமுதற்கடவுள் என அதில் கூறப்பட்டுள்ளது. அவரே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் மும்மூர்த்தியாக திகழ்கிறார். பவிஷ்ய புராணம், வராக புராணத்திலும் சூரியவழிபாடு இடம்பெற்றுள்ளது. சீனயாத்ரீகர், யுவான்சுவாங் எழுதிய பயணக்குறிப்பில் இந்தியாவில் நடந்த சூரியவழிபாடு பற்றிய குறிப்பு உள்ளது.