தைப்பூச வழிபாடு: தங்க கவசத்தில் முருகப்பெருமான்!
ADDED :4316 days ago
கொடைக்கானல்: தைப்பூசத்தை முன்னிட்டு, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் முருகப்பெருமான் தங்க கவசத்தில் காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டனர். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலிலும், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேல்மலை கிராம பக்தர்கள் வழிபட்டனர்.