உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி பகவதி அம்மன் கோயிலில் நிறை புத்தரி பூஜை

குமரி பகவதி அம்மன் கோயிலில் நிறை புத்தரி பூஜை

நாகர்கோவில்: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் நிறைபுத்தரி பூஜை நடைபெற்றது. இங்கு ஒரு ஆண்டில் தை மற்றும் ஆடி ஆகிய இரண்டு மாதங்களில் நிறை புத்தரி பூஜை நடைபெறுகிறது. வயலில் விளையும் நெற்கதிர்களை தேவிக்கு பூஜை செய்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் மேல்சாந்தி சுமந்து வந்து தேவியின் முன் வைத்து பூஜை செய்தார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நெற்கதிர்களை வீட்டில் வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல செழிப்புடன் வாழமுடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !