பூதப்பாண்டி கோயிலில் கொள்ளை
ADDED :4318 days ago
நாகர்கோவில்: பூதப்பாண்டி அருகே ஈசாந்தி மங்கலத்தில் திருவேங்கடபெருமாள் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் புகுந்த கொள்ளையர்கள் இங்கிருந்த இரண்டு பெரிய குத்துவிளக்குகள், ஒரு சிறிய விளக்கு, உருளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுபற்றி கோயில் ஸ்ரீகாரியம் சேதுராமன் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.