உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர யாகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமி நரசிம்மர், சீனுவாசபெருமாள், ஐவர் சன்னதி, யோக நரசிம்மர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கூடிய லட்சுமி நரசிம்மருக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.தொடர்ந்து முகுந்தன் பட்டாச்சார்யார் தலைமையில் உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டியும், திருமண தடை நீங்கவும், சுவாதி நட்சத்திர யாகம் நடந்தது. நவதானியங்கள், பழங்கள், மூலிகை பொருட்கள், பட்டுப்புடவை, உள்ளிட்ட பொருட்களை கொண்டு யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வேதா, செயல் அலுவலர் கார்த்திகேயன்(பொ), உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !